/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shankar_6.jpg)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கரோனா நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. கரோனா நெருக்கடி தளர்வுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பல படங்களின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இந்தியன் 2 படத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன.
இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரணும் பவன் கல்யானும் இணைந்து நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகதாகவும் அதில் இறுதி முடிவு எட்டப்பட்டால் இயக்குனர் ஷங்கரின் பாணியிலான பிரம்மாண்ட திரைப்படமாக அப்படம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)