Trying to extort money from a maala parvathi

மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் மாலா பார்வதி. தமிழில் ‘இது என்ன மாயம்’, ‘நிமிர்’, ‘அன்னபூரணி’ உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் இவரிடம் பண மோசடி செய்ய ஒரு கும்பல் முயற்சித்துள்ளது. மதுரையில் படப்பிடிப்பில் இருந்த போது, வீடியோ கால் மூலம் ஒருவர் போன் செய்து உங்கள் பெயரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கூறியுள்ளார். பின்பு சிலர் மும்பை போலீஸ் அதிகாரிகள் என்று கூறி, நடிகையின் பெயரில் கடத்தப்பட்ட போதை பொருளை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அதை சரிசெய்ய பணம் தருமாறும் மிரட்டியுள்ளனர். அப்போது அவர்களின் அடையாள அட்டை நடிகையிடம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதை நடிகை கண்டுபிடிக்க பின்பு சந்தேகமடைந்து அவர்களது போன் காலை துண்டித்துள்ளார்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மாலா பார்வதி, இதுபோன்ற மோசடிஅழைப்புகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.