Skip to main content

அஜித்தின் 'துணிவு' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

thunivu ott release date update

 

மூன்றாவது முறையாக அ.வினோத் - அஜித் கூட்டணியில் பொங்கலன்று வெளியான துணிவு படம் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். 

 

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் வசூல் குறித்த விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 8 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.