Skip to main content

பிரான்ஸ்  நாட்டின் தொலைக்காட்சியில் துணிவு

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

 Thunivu at French television  

 

பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அஜித் நடித்த ‘துணிவு’. மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பானதாக இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் டிவி விவாத நிகழ்வில் துணிவு படம் குறித்து விவாதிக்கப்பட்டது என்கிற வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. முதலில் இது போட்டோஷாப் செய்யப்பட்டதாக இருக்கும் என்று நினைத்தவர்கள் வீடியோ பார்த்ததும் அதன் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். 

 

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய சினிமாவின் ‘ஜார்ஜ் குளூனி’ என்று அஜித்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். அது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து துணிவு தயாரிப்பாளர் போனிகபூர் “பிரான்சில் ‘துணிவு’ படத்தின் வரவேற்பைக் கண்டு நான் பரவசமடைந்தேன். பார்வையாளர்கள் மிகவும் உற்சாகமாக படத்தில் மூழ்கியுள்ளனர். இது ஓர் அற்புதமான உணர்வு” எனத் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவமனையில் ஷாலினி; அஜர்பைஜானில் இருந்து வந்த அஜித் குமார்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Ajith Kumar from Azerbaijan

தடையறத் தாக்க, தடம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் இருந்து தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென்று நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, சில நாட்கள் தொடங்காமல் இருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. அந்த வகையில், இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கிடையில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தயாரிப்பு நிறுவனம் கடந்த ஜுன் 30ஆம் தேதி வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினிக்கு மைனர் ஆப்ரேஷன் நடந்துள்ளது. இதனையடுத்து, நேற்று (02-07-24) அஜித் குமார் அஜர்பைஜானில் இருந்து சென்னைக்கு வந்தார். இது தொடர்பான வீடியோ நேற்று வெளியானது. இன்று அஜித் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவியை நேரில் பார்த்து கவனித்து வந்துள்ளார். அஜித்தும், ஷாலினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மீண்டும் அஜித் அஜர்பைஜானுக்கு சென்று விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
'Good Bad Ugly' second look poster released!

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திடீரென்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதரராபத்தில் நடந்துவந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று (27-06-24) மாலை 6:40 வெளியாகியுள்ளது. இந்த பதிவை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த படம், அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவித்து, ‘God Bless u mamae' என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.