master team

கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் கரோனா குறித்த அச்சம் தொடர்ந்து நிலவி வருவதால், 50 சதவிகிதப் பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான திரையரங்குகள், ரசிகர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

Advertisment

இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டும் 100 சதவித இருக்கைகளுடன் திரையரங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பின.

Advertisment

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் 100 சதவித இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்குவதை மறுபரீசிலனை செய்யும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி தமிழக அரசு மறு அறிவிப்பு வரும் வரை திரையரங்குகள் 50 சதவித இருக்கைகளுடனே திரையரங்கங்களை இயக்குமாறு அறிவித்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் சூழலில், மறுபுறம் மாஸ்டர் பட டிக்கெட்டுகளையும் அதிக விலைக்கு விற்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ், இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் பட வசனகர்த்தா ரத்னகுமார் மற்றும் அந்த படத்தில் நடித்த துணை நடிகர்கள் ஆகியோர் மாஸ்டர் படம் வெற்றிபெற வேண்டும் என்று திருவண்ணாமலையில் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Advertisment