Skip to main content

"திருமாவின் வாழ்த்தை தேசிய விருதாகவே கருதுகிறோம்" - ஷாந்தனு

 

thirumavalavan mp praises shanthanu movie raavana kottam

 

ஷாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் நேற்று (12.05.2023) வெளியாகியுள்ளது. 

 

இப்படம் ஒரு சில சமூகத்தினரை காயப்படுத்தியுள்ளதாக பேச்சுகள் எழுந்த நிலையில் "இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவு கூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம்" என குறிப்பிட்டு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் இப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி சென்னையில் படக்குழுவுடன் இணைந்து பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷாந்தனு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதி காவலர் தொல். திருமாவின் வாழ்த்தை எங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.