Skip to main content

"ரெண்டு மூனு எதிர்பாராத விஷயங்கள் இருக்கு... ஆனா அத நாங்க..." - நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

"There are two or three surprising things... but we..."- actor Vishnu Vishal interviewed!

 

'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் நேற்று (23/11/2022) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது விஷ்ணு விஷால் கூறியதாவது, "எல்லாருக்கும் வணக்கம், 'கட்டா குஸ்தி' திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது. ரொம்ப ஹாப்பியா இருக்கோம். ஏன்னா ரொம்ப நாளுக்கு அப்புறம் தியேட்டர்ல நல்ல ஹியூமர் கலந்து ஃபேமிலி எண்டர்டெயினர் வருது. நிறைய படங்கள் சமீபத்துல ஆக்சன், த்ரில்லர் இந்த ஜானர்ல தான் வருது. ஃபேமிலி ஆடியன்ஸுக்கு இது கரெக்ட்டான படமாக இருக்கும்னு நாங்க நம்புறோம். 

 

உதயநிதி சார் ரிலீஸ் பண்றாரு. ரவி தேவா சார் மற்றும் நானும் புரொடியூஸ் பண்ணிருக்கோம். என் கரியர்ல ஜாலியான ஒரு நல்ல படமா இருக்கும்னு நான் நம்பறேன். இதுக்கு முன்னாடி எஃப்ஐஆர் பெரிய ஹிட் ஆச்சு. எஃப்ஐஆர் இந்த வருஷம் பிப்ரவரில ரிலீஸ் ஆச்சு. அதுக்கு அப்புறம் வர படம்.  எஃப்ஐஆர் மாதிரி இந்தப் படத்திற்கும் ஒரு பெரிய ரிஸப்சன் கிடைக்கும்னு ரொம்ப ஸ்ட்ராங்கா நம்பறேன். படத்தின் ஹீரோயின் எல்லாத்துக்கும் நல்லா தெரியும். 

 

நார்த்ல பாலிவுட் படங்களோட நம்ம ஊரு படங்கள் ஓட ஆரம்மிச்சிடிச்சு. பொன்னியின் செல்வனா இருக்கட்டும்; இல்ல, புஷ்பா இருக்கட்டும்; கே.ஜி.எஃப் ஆக இருக்கட்டும். சினிமாவே மாறுது. காரணம், ஆடியன்ஸ் மாறறாங்க. உங்களுக்கு கண்டென்ட் தேவைப்படுது. இந்தத் தருணத்துல கண்டென்ட்டுக்கு மரியாதை இருக்கு சார். 

 

யாருலாம் நல்ல கண்டென்ட் வச்சிருக்காங்களோ, அவங்களுக்கு ஜெயிக்கிறதுக்கு உண்டான நிறைய சான்சஸ் இருக்கு. எக்ஸாம்பிள்ஸ் இப்ப 'லவ் டுடே' படம் வந்தது. ரிலீஸுக்கு முன்னாடி யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. பட் ரிலீஸுக்கு அப்புறம் ஒரு கலக்கு கலக்கிடிச்சி. என்னன்னா, அந்தப் படங்கள் ஓடும் போது நிறைய பேருக்கு நம்பிக்கை வந்திருச்சு. எங்க படத்துல எங்க நம்பிக்கை என்னன்னா, இது ஜாலியான கமர்ஷியல் படமா இருந்தாலும், உள்ளுக்குள்ள சின்ன கண்டென்ட் இருக்கு. அத நாங்க ட்ரைலர்ல காமிக்கல. 

 

இரண்டு மூன்று சர்ப்ரைஸான விஷயங்கள் இருக்கு. படம் ஸ்டார்ட் ஆகும் போது அந்த சர்ப்ரைஸ் உங்களுக்கு ஓபன் ஆகும். 'Husband And Wife'- க்கு உள்ள ரிலேஷன்ஷிப் பத்தி பேசற படம் இது. பயங்கரமான ஈகோ வார்-ஆ இருக்கும். 'கட்டா குஸ்தி' டைட்டில் வைச்ச காரணம், குஸ்திங்கறதுனால கிடையாது. படத்துல புருஷன், பொண்டாடிக்கு நடுவுல நடக்குகிற ஈகோ குஸ்தி தான் இந்தப் படம். ஒரு அழகான லவ் ஸ்டோரி இருக்கு. நிறையா எமோஷன்ஸ் இருக்கு. ஃபேமிலி வேல்யூஸ் இருக்கு.

 

நாங்க ரொம்ப கான்ஃபிடன்டா இருக்கோம். நான் சொன்ன மாதிரி, இந்த மாதிரி சினிமா வந்து கொஞ்ச நாள் ஆச்சு. ரொம்ப சீரியஸா; இல்ல, வார் மூவி; அப்படி தான் வருது. இது எல்லாரும் வந்து பாப்பாங்க. ஃபேமிலிஸோட. அதனால நாங்க நம்புறோம். கண்டென்ட்டுக்கு மரியாதை இருக்கு. நம்ம படத்துல சின்னதா கண்டென்ட் இருக்கு." என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரவிய வதந்தி - முற்று புள்ளி வைத்த கமல் படக்குழு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
aishwarya lekshmi joined kamal thug life team

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தில் நடிக்கிறார். முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

ad

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக முன்பே படக்குழு அறிவித்திருந்தனர். கடந்த கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  

இப்படத்தில் விருமாண்டி புகழ் அபிராமியும், நாசர் உள்ளிட்ட பிரபலங்கலை தொடர்ந்து கௌதம் கார்த்திக் மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. இதையடுத்து ஐஷ்வர்யா ராய் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதற்கு முற்றும் புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஐஷ்வர்யா லக்‌ஷ்மி இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார் என்பது குறிப்பிடதக்கது. 

Next Story

"என்னம்மா நீ இப்படி இருக்கியேம்மா..." - நடிகையை கலாய்த்த ஜெயம் ரவி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

jayam ravi speech at ponniyin selvan 2 press meet

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை (28.04.2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இதனை முன்னிட்டு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் மணிரத்னம், பார்த்திபன், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது ஜெயம் ரவி படக்குழுவினரை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

 

அவர் ஐஸ்வர்யா லட்சுமி பற்றி கூறுகையில், "அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். எனக்கும் அவங்களுக்கும் சில காட்சிகள் இருக்கிறது. ஒரு காட்சியில் கயிறு கூட இல்லாமல் யானை மேல் ஏறினாங்க. அது சாதாரணமான விஷயம் இல்லை. ஜாக்கி ஜான் போன்று அவுங்க செயல்பட்டாங்க. அவங்களுடைய மற்றொரு வெர்ஷனை நான் அப்போது தான் பார்த்தேன். நான் யானை மேல் முன்னாடி உட்கார்ந்திருந்தேன். அவுங்க பின்னாடி உட்காந்திருந்தாங்க. அப்போது ஒரு சப்போர்ட்டுக்கு என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதற்கு ஒரு ராஜாவை அப்படி யாரும் தொட்டுவிட முடியாது என்று சொன்னாங்க. அப்போது கூட அந்த கதாபாத்திரமாகவே இருந்தாங்க. என்னம்மா நீ இப்படி இருக்கியேம்மா...என சொல்லிவிட்டு பெருமைப்பட்டேன். இதுபோன்று அவங்களுக்கு 100 நல்ல படங்கள் வர வேண்டும். அவங்களோடு ஒன்றாக இணைந்து நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார். 

 

த்ரிஷா பற்றி கூறுகையில், "இப்போது டிவி (TV) த்ரிஷா வைரஸ் என புதுசாக வைரஸ் வந்திருப்பதாக ட்விட்டரில் சொன்னாங்க. அது வந்தால் போகமாட்டேங்குதாம். மனசுக்குள்ள வந்துவிடுகிறதாம். காலையில் இருந்து இரவு வரை அந்த வைரஸ் இருக்கிறதாம். அந்த வைரஸ் போக வேண்டாம். நான் மனசுக்குள்ளயே வச்சுக்கிறேன் என பல பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க" என்றார். மேலும் த்ரிஷாவை பார்த்து, "இதுபோன்று ஒரு வைரஸை பரப்பாதீங்க. உங்க வைப்-அ பரப்புங்க. த்ரிஷாவை நாங்க எப்போதுமே ரசிப்போம். இப்போ தைரியமாக சொல்வேன் என்னுடைய தங்கச்சி என்று. ஏனென்றால் படத்தில் தங்கச்சியாக நடித்திருக்காங்க. சின்ன வயசிலிருந்தே ஒன்றாக பார்த்து வருகிறோம். பழகி வருகிறோம். அந்த அன்புக்கு நன்றி" என்றார்.