Skip to main content

"நடிகர்கள் பின்னால் ஓடுவது அவலநிலை" - ஜல்லிக்கட்டு குறித்து தங்கர் பச்சான் முதல்வருக்கு கோரிக்கை

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

thankar bachan about jallikattu

 

தமிழகத்தின் பல இடங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம்போல் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 

 

இந்நிலையில், இயக்குநர் தங்கர்பச்சான் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கார் பரிசாக வழங்குவதை விட, உழவுத்தொழில் தொடர்பான இயந்திரங்கள் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத்தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவற்றைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்.

 

பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். தயவுகூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கை குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும், மற்றொரு பதிவில், "உயிரைப் பணயம் வைக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களின் வீரம் தான் போற்றுதற்குரிய உண்மையான வீரம். அவர்கள் தான் தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இச்சமூகம் உரிய மதிப்பளிப்பதில்லை! இதேவேளையில் பொய்ப்புனைவு சினிமா காட்சிகளில் தோன்றுபவர்களை உண்மையான வீரனாக எண்ணி இளைஞர் சமுதாயத்தினர் சண்டையிட்டுக் கொண்டு அவர்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அவல நிலை என்று மாறுமோ" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வன்மையாக கண்டிக்கிறேன்” - மறுப்பு தெரிவித்த தங்கர் பச்சான்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
thankar bacchan election candidate issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க இடம் பெற்ற நிலையில், அக்கட்சியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.  இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதே வேளையில் அவர் போட்டியிடவில்லை என ஒரு தகவல் உலா வந்தது.

இந்த நிலையில், அத்தகவல் குறித்து தங்கர் பச்சான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் எனக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்” என்றார்.  

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.