/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vignesh-n.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து நடத்தும் 'ரௌடி பிக்சர்ஸ்' நிறுவனம் 'செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ' நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் "கடவுளுக்கு நன்றி. திறமையான நடிகர்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவு. என்னுடைய கதையை திரையில் கொண்டு வருவதற்கு இவர்களை விட சிறப்பான நடிகர்கள் இருக்க முடியாது. இந்த படம் சிறப்பாக உருவானதற்கு காரணமான இவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)