Skip to main content

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தங்கர் பச்சான்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

gdssdb

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் என தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. 

 

இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர். அந்த வகையில், திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் இன்று (27.07.2021) சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். 

 

அப்போது, கனடாவைச் சேர்ந்த ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான சுரேஷ் ரோஹின் அவர்களின் ஏற்பாட்டில் அனுப்பிவைத்திருந்த ஒரு கோடியே இருபது இலட்சம் மதிப்பிலான 14 Portable Ventilator கருவிகளை அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்து வழங்கும் பொருட்டு அவற்றை உதயநிதி ஸ்டாலினிடம் தங்கர் பச்சான் இன்று ஒப்படைத்தார். அண்மையில் கடலூர் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டின் காரணமாக உயிரிழந்த கரோனா நோயாளியின் சம்பவத்தை கனடா நண்பருடன் பகிர்ந்துகொண்டதால், அவர் இந்தக் கருவிகளை வாங்கி அனுப்பிவைத்ததாக தங்கர் பச்சான் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகிநீடுவும் உடன் இருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

“பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளார் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு. எனவே ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். தி.மு.க. தொண்டர்கள் பொறுப்பேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள் முடிந்து 101 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நாம் அவருக்கு கொடுக்க கூடிய பரிசாக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனப் பேசினார்.

Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து ‘மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல்’ 2 ஆம் கட்ட நாடாளுமன்ற பிரச்சாரப் பயணத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக. தலைவர் தலைமையில் திராவிட மாடல் அரசு வெல்லட்டும். பாசிசம் ஒழியட்டும். BELONG TO THE DRAVIDIAN STOCK” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநில சுயாட்சியின் உரிமைக்குரல் நம் அண்ணாவின் மண்ணில், பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.