Skip to main content

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட தமன் 

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

thaman join sivakarthikeyan's next movie

 

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இதில் அவருக்கு  ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து எஸ்.கே. புரோடக்சன் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பை முடித்துள்ள ‘டான்’ படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

 

ad

 

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனை ரீட்வீட் செய்த தமன், "நன்றி சகோதரர். 'எஸ்கே 21' படத்தில் பின்றோம், தட்றோம், தூக்குறோம்" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் தமன் இசையமைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், படத்தின் இயக்குநர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் ‘எஸ்கே 21’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
sivakarthikeyan ar murugadoss movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார்.