Skip to main content

தளபதி 67 அப்டேட் எப்போது? தேதியை சொன்ன லோகேஷ் கனகராஜ் - வெயிட்டிங்கில் ரசிகர்கள்

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

thalapathy 67 update by lokeesh kanagaraj

 

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடி ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளார்கள். 

 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடிப்பதாகவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பு தெரிவித்தது. 

 

அந்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், எந்த நாட்களில் அப்டேட் வெளியாகும் என்பதை தற்போது லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'மைக்கேல்' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரித்துள்ளார்கள். இப்படம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். 

 

அந்த வகையில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், "தளபதி 67 படம் நூறு சதவீதம் என் பட ஸ்டைலில் தான் இருக்கும். படத்தின் அப்டேட் பற்றிய ஹின்ட் மட்டும் தருகிறேன். அப்டேட் பிப்ரவரி 1, 2 அல்லது 3 தேதிகளில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

 

முன்னதாக விஜய்யை வைத்து மாஸ்டர் படம் 50 சதவீதம் என் ஸ்டைலில் இருக்கும் எனவும் 50 சதவீதம் விஜய் ஸ்டைலில் இருக்கும் எனவும் தெரிவித்த நிலையில், தளபதி 67 படம் 100 சதவீதம் என் ஸ்டைலில் இருக்கும் என லோகேஷ் சொல்லியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், விக்ரம் பட பாணியில் ஒரு அறிவிப்பு டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் கூறிய விவரங்கள் நெகிழவைத்து” - நித்திலன் சாமிநாதன்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nithilan saminathan about vijay praised his maharaja movie

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நித்திலன் சாமிநாதன், “டியர் விஜய் அண்ணா, இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு பெருமையாக உணர்கிறேன். மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னைப் நெகிழவைத்தது. அது எனக்கு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. லவ் யூ ணா” என பதிவிட்டுள்ளார்.

Next Story

“பல வருடங்கள் கழித்து சந்திப்பு” - ரம்பா நெகிழ்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
vijay rambha recent clicks

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர் ரம்பா. 2010 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர், கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு குடி பெயர்ந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறது. 

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் ரம்பா. ஆனால் சமீபகாலமாக லைம் லைட்டில் இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் விஜய்யுடன் சந்தித்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார் ரம்பா. தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விஜய்யை சந்திதிருந்த நிலையில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து, “பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

vijay rambha recent clicks

விஜய் மற்றும் ரம்பா இருவரும் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தச் சூழலில் விஜய்யுடன் ரம்பா எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.