/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/114_30.jpg)
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில், ரஜினி தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். ‘குறி வச்சா இரைவிழணும்...’ எனரஜினி பேசும் வசனம் ரசிக்க வைக்கிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)