Skip to main content

'அதிரடிக்காரன்...' - புது லுக்கில் ரஜினி

 

thalaivar 170  rajini look poster

 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு தயாராகியுள்ளார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை கொச்சியில் தொடங்குகிறது. அதற்காக விமானம் மூலம் கேரளா சென்றுள்ளார். த.செ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது.

 

இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதுவரை துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிவித்து ரஜினிகாந்த் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ரஜினிகாந்தின் லுக் ஸ்டைலாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

 

இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார் ரஜினி.