Skip to main content

“அவர்கள் இருவர் செய்வதும் அதே அளவிலான துன்புறுத்தல்தான்...”- டாப்ஸி

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

tapsee


இளம் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் நெபோடிஸம் குறித்து கங்கணா ரனாவத் கடுமையாக விமர்சித்து பேட்டியளித்து வந்தார். இதில் பல நடிகர், நடிகைகளையும் சாடினார். மேலும், டாப்ஸி மற்றும் ஸ்வரா பாஸ்அர் போன்றவர்களையும் விமர்சித்தார். அந்தப் பேட்டியில், “வாய்ப்புகளைத் தேடும் டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் போன்ற வெளியாட்கள், தங்களுக்கு இந்தத் துறை பிடிக்கும் என்பார்கள். உங்களுக்கு இந்தத் துறை பிடிக்குமென்றால், கரண் ஜோஹரைப் பிடிக்கும் என்றால் ஏன் ஆலியா, அனன்யாவைப் போல உங்களுக்கு வாய்ப்புகள் வருவதில்லை? அவர்கள் துறையில் இருப்பதே வாரிசு அரசியலுக்கான அத்தாட்சி” என்றார்.

 

இதற்குப் பதிலளித்துள்ளா டாப்ஸி, “வெளியிலிருந்து வருபவர்களைப் பற்றி, எங்களுக்கு நிறைய தந்திருக்கும் துறையைப் பற்றி இப்படி மட்டமாகப் பேசுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. துறைக்குள் வரும் புதியவர்களின் பெற்றோர் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நாங்கள் ஏதோ வெளியிலிருந்து வருபவர்களை ஒழித்துக் கட்டும் மோசமானவர்கள் என்றுதானே?

 

கரண் ஜோஹரைப் பிடிக்கும் என்று நான் எங்குமே சொன்னதில்லை. ஆனால் அவரைப் பிடிக்காது என்றும் சொல்லவில்லை. உங்களுக்குப் பிடிக்காத நபரை இன்னொருவருக்கும் பிடிக்கவில்லை என்றால் அப்போது அந்த இன்னொருவர் அந்த நபரிடம் வாய்ப்பு தேடுகிறார் என்று அர்த்தமா? இந்தத் தர்க்கமே தவறு.

 

அடிப்படையில் என் தோற்றத்தினால் மட்டுமே எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று நான் நினைக்கவில்லை. எனக்கும் போராட்டங்கள் இருந்திருக்கின்றன. நான் அதைப் பெரிதாக்குவதில்லை. நேர்மறையான சிந்தனையோடு அதைக் கையாள்கிறேன். எனவே, நானும் வெளியிலிருந்து வந்த மற்ற நடிகர்களைப் போலத்தான்.

 

எதிர்மறை விஷயங்கள் இருந்தாலும் கூட நான் அதையும், வெறுப்பையும் மற்றவர்களுக்குக் காட்டமாட்டேன். ஏனென்றால் அது என் மன முதிர்ச்சியைத் தடுக்கும். கங்கணாவுக்கு ஒரு கருத்து இருக்க எல்லா உரிமையும் இருப்பதைப் போலவே எனக்கும் உண்டு. எனது கருத்து அவரோட உடன்படவில்லை என்பதால் நான் தாழ்ந்துவிடமாட்டேன்.

 

கடந்த 3 வருடங்களாக, வருடத்துக்கு 4 படங்களில் நடித்து வருகிறேன். ஐந்து திரைப்பட அறிவிப்புகள் வரவுள்ளன. எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று யார் சொன்னது? நான் நிதானமாக, நிலையாக எனது திரைப்பயணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆம்! எனக்குப் பதிலாக சில படங்களில் வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், எனது கடின உழைப்பை மட்டமாகப் பேசும், தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும், கங்கணாவும் அவர் சகோதரி ரங்கோலி செய்வதும் அதே அளவு துன்புறுத்தல்தான்.

 

கங்கணா தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் எந்த ஒரு மாஃபியா கூட்டமும் எனது படங்களை இதுவரை தயாரித்ததில்லை, தயாரிக்கப் போவதுமில்லை. எனவே எப்படி நான் இருப்பது வாரிசு அரசியலுக்கான அத்தாட்சி ஆகும்? மற்றவர்களின் வெற்றிக்கான காரணத்தைத் தவறாகப் பேசுவதன் மூலமாகத்தான் நீங்கள் உங்களை வெற்றிகரமானவர் என்று காட்டிக்கொள்ள முடியுமா?

 

                  http://onelink.to/nknapp

 

நான் கசப்பாக இருக்க விரும்பவில்லை. என் தனிப்பட்ட வஞ்சகத்தைத் தீர்க்க ஒருவரின் மரணத்தை எனக்குச் சாதகமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு வாழ்வாதாரம் அளித்த துறையைக் கேலி செய்ய விரும்பவில்லை. 'பதி பத்னி அவுர் வோ' திரைப்படத்தில் என்னை மாற்றியதற்கு எதிராக நான் குரல் கொடுத்தேன். ஒரு தவறான செயலைத் தட்டிக் கேட்டேன். படத்தின் இயக்குநரும் எனக்கு ஆதரவுக் குரல் தந்தார். எனவே, நான் பிரச்சினைகளைப் பற்றி பேசப் பயப்படுவேன் என்று கிடையாது. சரியான நோக்கத்தோடு நாம் பேசும்போது மக்கள் நம்மை ஆதரிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடவுள் அவமதிப்பு? - டாப்ஸிக்கு வலுக்கும் கண்டனங்கள்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Taapsee Pannu Trolled For Wearing Goddess Lakshmi Necklace

 

தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் இந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியின் 'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. 

 

சமீபத்தில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் டாப்ஸி கலந்து கொண்டார். அப்போது அணிவகுப்பு நடைபெற்றது. அதில் டாப்ஸி அணிந்து வந்த உடையும் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாப்ஸி சிவப்பு நிற கவுனும் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸும் அணிந்திருந்தார்.  

 

இந்த நிலையில் கவர்ச்சி உடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை அவர் எப்படி அணியலாம் என சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாக டாப்ஸியின் செயல் உள்ளதாக கூறி கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

 

 

Next Story

மித்தாலி ராஜின் பயோபிக் ; ட்ரைலரை வெளியிட்ட படக்குழு

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Mithali Raj's biopic; The film crew released the trailer

 

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. அந்தவகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை வைத்து பாலிவுட்டில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 'சபாஷ் மித்து' என்ற தலைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் மித்தாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்சி பன்னு நடிக்கிறர். 'வியாகாம்18 ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்க அமித் திரிவேதி இசையமைத்து வருகிறார். சமீபத்தில் படக்குழு வெளியிட்ட ஒரு போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்றது. 

 

இந்நிலையில் 'சபாஷ் மித்து' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலர், மித்தாலி ராஜா வாழ்க்கையோடு சேர்த்து கிரிக்கெட் விளையாட்டில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளையும் பேசுவது போல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.