Skip to main content

தமிழ்நாடு அரசு விருது பெறும் பிரபலங்களின் பட்டியல்

Published on 02/09/2022 | Edited on 03/09/2022

 

tamilnadu govt cinema and television award list

 

ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறந்த திரைப்படம், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தமிழக அரசு விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த விருதுகள் வழங்கப்படவில்லை. 

 

இந்த நிலையில் தமிழக அரசு விருது வழங்கும் விழா வரும் 4ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.

 

இதில்  தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம் என வழங்கப்படவுள்ளது.  சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்க பதக்கம் வழங்கப்படுகிறது. 

 

அதேபோல், சின்னத்திரையில் சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் என 20 பேருக்கு வழங்கப்படவுள்ளது. மேலும்  சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. 

 

தமிழக அரசு விருது பெருவர்பவர்களின் விவரங்கள்;

 

சிறந்த நடிகர்கள்;

2009 - கரண் (மலையன்) 

2010 - விக்ரம் (ராவணன்) 

2011 - விமல் (வாகை சூடவா) 

2012 - ஜீவா (நீதானே என் பொன்வசந்தம்) 

2013 -ஆர்யா (ராஜா ராணி) 

2014 - சித்தார்த் (காவியத் தலைவன்)

 

சிறந்த இயக்குநர்கள்; 

2009 - வசந்தபாலன் (அங்காடித் தெரு) 

2010- பிரபு சாலமன் (மைனா) 

2011- ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்) 

2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9) 

2013- ராம் (தங்கமீன்கள்) 2014- ராகவன் (மஞ்சப்பை)

 

சிறந்த இசையமைப்பாளர்

2009 - சுந்தர் சி.பாபு(நாடோடிகள்)

2010 - யுவன்சங்கர் ராஜா(பையா)

2011 - ஹாரிஸ் ஜெயராஜ்(கோ)

2012 - இமான்(கும்கி)

2013 - ரமேஷ் விநாயகம்(ராமானுஜன்)

2014 - ஏ.ஆர்.ரகுமான்(காவியத் தலைவன்)

 

தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2009

முதல் பரிசு - பசங்க

இரண்டாம் பரிசு - மாயாண்டி குடும்பத்தார்

மூன்றாம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு

 

தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2010

முதல் பரிசு - மைனா

இரண்டாம் பரிசு - களவாணி

மூன்றாம் பரிசு - புத்ரன்



தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2011

முதல் பரிசு - வாகை சூடவா

இரண்டாம் பரிசு - தெய்வத்திருமகள்

மூன்றாம் பரிசு - உச்சிதனை முகர்ந்தால்

சிறப்பு பரிசு - மெரினா

 

தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2012

முதல் பரிசு - வழக்கு எண் 18/9

இரண்டாம் பரிசு   - சாட்டை

மூன்றாம் பரிசு   - தோனி

சிறப்பு பரிசு - கும்கி

 

தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2013

முதல் பரிசு - ராமானுஜம்

இரண்டாம் பரிசு - தங்கமீன்கள்

மூன்றாம் பரிசு - பண்ணையாரும் பத்மினியும்

சிறப்பு பரிசு - ஆள்

 

தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2014

முதல் பரிசு - குற்றம் கடிதல்

இரண்டாம் பரிசு - கோலி சோடா

மூன்றாம் பரிசு - நிமிர்ந்து நில்

சிறப்பு பரிசு - காக்கா முட்டை

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.