/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/indini.jpg)
சமீப காலமாக முன்னணி நடிகர்களின் எந்தப் படத்திற்கும் அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜயின் ‘வாரிசு’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களுக்கும் அனுமதியின்றி நள்ளிரவு, அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் எழுந்த சர்ச்சையின் காரணமாக சமீப காலமாக எந்தப் படங்களுக்கும் அதிகாலை காட்சிக்குஅனுமதி வழங்குவதில்லை.
இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் நாளை (12-07-24) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
நாளை வெளியாகவுள்ள இந்தியன் 2 படத்திற்கு சிறப்பு காட்சி வேண்டி லைகா நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, நாளை காலை 9 மணிக்கு இந்தியன் 2 படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி வழங்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)