Skip to main content

7 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரையுலகம்!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 

dhanush

 

திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா நெருக்கடி நிலை காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தன. இந்த நிலையில், டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இருந்து 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், மொத்தம் 7 விருதுகளை தமிழ்த்திரையுலகம் வென்றுள்ளது. அவை பின்வருமாறு...

 

சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

சிறந்த நடிகர் விருதிற்கு நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

சிறந்த துணை நடிகருக்கான விருதை 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்காக விஜய் சேதுபதி வென்றுள்ளார்.

 

சிறப்பு நடுவர் தேர்வில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'ஒத்த செருப்பு' திரைப்படம் வென்றுள்ளது.

 

சிறந்த ஒலி வடிவமைப்பாளருக்கான விருதை ஒத்த செருப்பு படத்திற்காக ரசூல் பூக்குட்டி வென்றுள்ளார்.

 

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை 'கேடி (எ) கருப்புதுரை' படத்தில் நடித்த நாக விஷால் வென்றுள்ளார்.

 

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை 'விஸ்வாசம்' படத்திற்காக இமான் வென்றுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்