Skip to main content

"அரசியலில் நுழைய தூண்டும்" - புதிய நாடாளுமன்றத்தில் தமன்னா

 

Tamannaah Bhatia on new parliament

 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் (19.09.2023) புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. அதில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

 

இதனிடையே புதிய நாடாளுமன்றத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களாகப் பாலிவுட் நடிகைகள் கங்கனா, ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். அழைப்பை ஏற்று வருகை தந்த அவர்களுக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் இனிப்பு வழங்கினார். மேலும் கலந்து கொண்ட நடிகைகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளித்தனர். 

 

இதனைத் தொடர்ந்து இன்று சிறப்பு அழைப்பாளர்களாக நடிகைகள் தமன்னா,திவ்யா தத்தா உள்ளிட்ட சில நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமன்னா, "இந்த மசோதா சாமானிய மக்களை அரசியலில் சேர தூண்டும்" என கூறினார்.