Taapsee Pannu talks about Karan Johar’s show

தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்டாப்ஸி. அந்த வகையில் தமிழில்ஜெயம் ரவியின்'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார்.இதனைதொடர்ந்து இந்தியில்அனுராக்காஷ்யப்இயக்கியுள்ள 'டோபரா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால்ப்ரோமோஷன்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்டாப்ஸி.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="35275995-498c-400a-a1f5-5343a071f662" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_35.jpg" />

Advertisment

அதில் ஒரு பகுதியாக ஒரு நிகழ்ச்சியில் டாப்ஸியிடம் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாப்ஸி, "அந்த நிகழ்ச்சியில் பேசும் அளவிற்கு என் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை" எனப் பதிலளித்துள்ளார். டாப்ஸியின் இந்த பதில் தற்போது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சியில், பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் டாப்ஸி இதுவரை கலந்துகொள்ளவில்லை. மேலும் அந்த நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் அவர்களது பாலியல் வாழ்க்கை குறித்து எப்போதும் கரண் ஜோகர் கேள்வி எழுப்புவது வழக்கம். அவரது கேள்வி பாலிவுட்டில் பலமுறை சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.