surya acted kamal haasan vikram movie confirmed

‘மாஸ்டர்’ படத்தின்வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில்,அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில்வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ட்ரைலர் மற்றும் இசை வரும் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனிடையே 'விக்ரம்' படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் கமல் மற்றும் சூர்யா இருவரும் சந்தித்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ 'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்துள்ளதுஉண்மையா இருக்குமோ என்று கமாண்ட்ஸ்செய்து அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும் 15 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள 'விக்ரம்' பட இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவும் கலந்து கொள்வார்என சினிமா வட்டரங்கள்தெரிவித்துள்ளன.

Advertisment

'விக்ரம்' படத்தில் கமல் எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் நேற்று(11.5.2022) வெளியாகி யூடியூப் தளத்தில்5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.