vhfshs

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

Advertisment

இந்த நிலையில், நடிகை சுனைனாவுக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம். அதிக ஜாக்கிரதையாக இருந்தும் எனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். அத்தனை விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என் குடும்பத்தினர் தவிர யாருடனும் நான் தொடர்பில் இல்லை. அவர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர்.

Advertisment

எனது சமூக வலைதளப் பக்கங்களை மொத்தமாக ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும், தேவை இருப்பவர்களுக்குச் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ உதவியாக இருக்கும் விஷயங்களைப் பகிரும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள். வீட்டிலேயே இருங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள். நான் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.