ரெஜினா படத்தில் நடித்த நடிகை சுனைனாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். நம்மோடு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
வெரைட்டியான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வம்சம், நீர்ப்பறவை போன்ற கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்கும்போது எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது எனக்குத் தெரியாவிட்டாலும் என்னுடைய கேரக்டர்களுக்காக அவற்றை நான் கற்றுக்கொண்டேன். ரெஜினா கேரக்டரும் நன்றாக வருவதற்காக நான் என்னுடைய உழைப்பை வழங்கியிருக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
பாண்டிராஜ் சாரின் படத்தில் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொண்டேன். எப்படிப் பேச வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்று நிறைய தெரிந்துகொண்டேன். அந்த ஷூட்டிங்கில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. சந்தோஷமாக நடித்தேன். சமுதாயத்திற்கு என்னால் செய்ய முடிந்த நல்ல விஷயங்களை நான் செய்துகொண்டிருக்கிறேன். விஜய் சார் செய்து வருவது நல்ல விஷயம். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் உதவி செய்வதைப் பார்த்துவிட்டு அவருடைய ரசிகர்களும் அதுபோல் உதவிகள் செய்ய வாய்ப்பிருக்கிறது. மக்களுடைய வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ரெஜினா ஒரு சிம்பிளான குடும்பப் பெண். அவளுடைய பயணம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும்.
லிவிங் டுகெதர் என்பது அவரவர் விருப்பம் தான். என்னுடைய திருமணம், எனக்கான நபரை நான் கண்டுபிடித்த பிறகு நடக்கும். யாரையும் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது. ஒரு த்ரில்லராக இருந்தாலும் ரெஜினா படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்தப் படத்துக்கு கேரள ரசிகர்களிடமும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு எமோஷனல் த்ரில்லராக, வித்தியாசமான ஒரு படமாக இது இருக்கும்.