Skip to main content

நாடகத்தில் நடந்த சிறிய தவறால் 16,000 கோடி நஷ்டம்... கேம் ஆஃப் த்ரோன்ஸ் குழு அதிர்ச்சி...

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீஸனான எட்டாவது சீஸன் வாரா வாரம் திங்கள் அன்று காலை 6:30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.  உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்ட டிவி தொடரில் கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கே முதலிடம். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதன் முதலில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஹெச்.பி.ஓ சேனலில் ஒளிப்பரப்பாக தொடங்கியது. இதனை அடுத்து உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கவர்ந்து, தற்போது டிவி சேனலில், டோரண்டில் அதிகம் டவுன்லோட் செய்து பார்க்கும் நிகழ்ச்சி என அனைத்திலும் முதலிடம் பிடித்திருக்கிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
 

got

 

 

அமெரிக்க எழுத்தாளரான ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டினின்  ‘அ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபையர்’ நாவலை அடிப்படையாக கொண்டது இந்த தொடர். சுமார் 7 தொடர்களை கொண்ட இந்த நாவலில் தற்போதுவரை ஐந்து தொடர்தான் பப்ளிஷாகி உள்ளது. இந்த ஐந்து தொடர்களை அடிப்படையாக கொண்டே நிகழ்ச்சி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கடைசி சீஸனான எட்டாவது சீஸனுக்கு வந்தடைந்துள்ளது. இந்த வாரம் திங்கள் கிழமை அன்று நான்காவது பகுதி வெளியானது. முந்தைய பகுதியில்தான் இரு முக்கிய குழுக்களுக்கும் போர் நடந்து முடிவடைந்ததை போன்ற அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் அந்த போரில் மடிந்தவர்களுக்கு கடைசி மரியாதை செலுத்திவிட்டு, போரை வென்றதை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் காட்சி இருந்தது. அப்போது ஒரு ஃபிரேமில்  ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கப் போல ஒரு பொருள் தெரிந்தது.
 

இது உடனடியாக காட்டுத் தீ போல ட்விட்டரில் பரவியது. பலரும் காபி கப் இருக்கும் படத்தை பதிவிட்டு ட்ரெண்டாக்கி வந்தனர். இதற்கு தயாரிப்பு நிறுவனத்தில் தொடங்கி, நாடகத்தின் ஆர்ட் டைரக்டர் வரை விளக்கமளித்தார்கள். அனைவரும் தவறுதலாக அந்த கப் ஃபிரேமில் தெரிந்துவிட்டது என ஒப்புக்கொண்டார்கள். திங்கள்கிழமை அடுத்து ஒளிப்பரப்பாகும் வீடியோக்களில் அந்த காபி கப் தெரியாததுபோல் எடிட் செய்து மாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது. 
 

 

 

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் இந்த சின்ன தவறால் ஏற்பட்ட விளைவை கண்டுபிடித்துள்ளது.ஹெச்.பி.ஓ சேனல் தன்னுடைய நிகழ்ச்சியில் வெறு ஒரு பிராண்ட்டை பணத்திற்காக விளம்பரப்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக அவர்களை தயாரிப்பு செலவுகளில் உபயோகப்படுத்திக் கொள்வார்களாம். 
 

தற்போது இந்த காபி கப் தெரிந்ததால் சுமார் 2.3 பில்லியன் டாலர் (இந்தியமதிப்பில் 16,000 கோடி) செலவின்றி ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரமாகியுள்ளதாம். இன்னுமொரு கொடுமையான விஷயம் என்ன என்றால் அந்த காபி கப் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துனுடையதே இல்லையாம்.

 

 

சார்ந்த செய்திகள்