
இந்தியா சினிமாவில் பழம் பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. இதுவரை 17 மொழிகளில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என்று இவர் படைத்த சாதனைகள் ஏராளம்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சினிமாவில் இனி பாடுவதில்லை என்பதை அறிவித்துவிட்டு, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பாடகி ஜானகி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி நேற்று மதியம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஜானகியின் மகன் மற்றும் இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும் ஜானகி தனது ரசிகருடன் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்த வதந்தி குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ஜானகி அம்மாவின் உடல்நலனை விசாரித்து எனக்கு 20 கால்களுக்கு மேல் வந்துவிட்டது. யாரோ ஒருவர் ஜானகி அம்மா மறைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியுள்ளனர். என்ன முட்டாள்தனமான செயல் இது? நான் அவரிடம் பேசினேன். அவர் மிக மிக நலமாக இருக்கிறார்.
யாருக்காவது ஒரு கலைஞரை மிகவும் பிடித்திருந்தது என்றால், அவர்களுக்குச் சிறு பிரச்சனை என்றால் சமூக வலைத்தளத்தைபாஸிட்டிவ்வாக பயன்படுத்துங்கள். அதைவிட்டுவிட்டு இதுபோன்ற விஷயங்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதீர்கள். தயவு செய்து இதுபோன்ற விஷயங்களை விளையாட்டிற்காகச் செய்யாதீர்கள். ஏன் இதுபோன்ற கரியங்களைச் செய்கிறீர்கள் ஜெண்டில்மேன்? நான் உங்களை ஜெண்டில்மேன் என்று அழைக்கலாமா? என்று கோபமாக பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)