Skip to main content

67வது பிலிம்பேர்... விருதுகளை வாரி குவித்த ’சூரரைப் போற்று’

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

soorarai pottru movie get 8 FilmfareAwardsSouth

 

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியானது.  ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை பெற்றதோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது. 

 

இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், 'சூரரைப் போற்று' திரைப்படம் 7 விருதுகளை வாங்கியுள்ளது. சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த இயக்குநர் (சுதா கொங்கரா), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி),  சிறந்த பின்னணி பாடகர்(கோவிந்த்  வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி( தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது. 

 

இதேபோன்று, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படமும், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7  பிரிவுகளின் கீழ் பிலிம்பேர் விருதுகளை குவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
 

Next Story

அட்லீ படத்திற்கு இரண்டு ஃபிலிம் ஃபேர் விருது!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
atlee jawan grab 2 award in 2024 filmfare

திரைத்துறையில் பிரபல விருதாகப் பார்க்கப்படும் ஃபிலிம் ஃபேர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டிற்கான 69வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா, குஜராத் காந்தி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர். விருது வென்றவர்களின் பட்டியல் பின்வருமாறு.

சிறந்த படம் - 12த் ஃபெயில்
சிறந்த படம் (விமர்சகர்கள் தேர்வு) - ஜோரம்
சிறந்த நடிகர் - ரன்பீர் கபூர் (அனிமல்)
சிறந்த நடிகை - ஆலியா பட் (ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி)
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) - விக்ராந்த் மாஸ்ஸே (12த் ஃபெயில்)
சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) - ராணி முகர்ஜி (மிஸ்ஸஸ் சாட்டர்ஜி விஸ் நார்வே), ஷெஃபாலி ஷா (த்ரீ ஆஃப் அஸ்)
சிறந்த இயக்குநர் - விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்)
சிறந்த துணை நடிகர் - விக்கி கவுஷல் (டங்கி)
சிறந்த துணை நடிகை - ஷபானா ஆஸ்மி (ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி)
சிறந்த இசை ஆல்பம் - அனிமல் 
சிறந்த பாடல் வரிகள் - அமிதாப் பட்டாச்சார்யா (ஸாரா ஹட்கே ஸாரா பச்கே)
சிறந்த பின்னணி பாடகர் - பூபிந்தர் பாபல் (அர்ஜன் வைல்லி - அனிமல்)
சிறந்த பின்னணி பாடகி - ஷில்பா ராவ் (பேஷாராம் ரங் - பதான்)
சிறந்த கதை - அமித் ராவ் (ஒஎம்ஜி 2)
சிறந்த திரைக்கதை - விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்)
சிறந்த வசனம் - இஷிதா மொய்த்ரா (ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி)
சிறந்த பிண்ணனி இசை - ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் (அனிமல்)
சிறந்த ஒளிப்பதிவு - அவினாஷ் அருண் தாவேரே (த்ரீ ஆஃப் அஸ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - சுப்ரதா சக்ரபோர்த்தி மற்றும் அமித் ரே (சாம் பகதூர்)
சிறந்த படத்தொகுப்பு - ஜஸ்குன்வர் சிங் கோஹ்லி - விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்)
சிறந்த ஆடை வடிவமைப்பு - சச்சின் லவ்லேகர், திவ்யா கம்பீர் மற்றும் நிதி கம்பீர் (சாம் பகதூர்)
சிறந்த சண்டை இயக்குநர் - ஸ்பிரோ ரசாடோஸ், அனல் அரசு, கிரேக் மேக்ரே, யானிக் பென், கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் (ஜவான்)
சிறந்த விஎஃப்எக்ஸ் - ரெட் சில்லிஸ் விஎஃப்எக்ஸ் (ஜவான்)
சிறந்த அறிமுக இயக்குநர் - தருண் துடேஜா (தக் தக்)
சிறந்த அறிமுக நடிகர் - ஆதித்யா ராவல் (பராஸ்)
சிறந்த அறிமுக நடிகை - அலிசே அக்னிஹோத்ரி (ஃபாரே)
வாழ்நாள் சாதனையாளர் விருது - டேவிட் தவான்