Skip to main content

கார் விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய சோனு சூட்... குவியும் பாராட்டுக்கள்!

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

Sonu sood saves youth car accident

 

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர்  சோனு சூட். கரோனா ஊரடங்கு காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்தார். இதனால் இந்தியா முழுவதும் அவருக்கு பாராட்டு குவிந்தது. இந்தியாவின் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.

 

ad

 

இந்நிலையில் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மேகா என்கிற மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் நடிகர் சோனு சூட் தனது காரில் சென்று கொண்டிருந்த போது மேம்பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது . இதை பார்த்த சோனு சூட் விபத்துக்குள்ளான காரில், மயங்கி கிடந்த இளைஞரை மீட்டு தனது காரில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது அந்த இளைஞர் நலமாக உள்ளார். இந்த சம்பத்தை நேரில் பார்த்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்த நிலையில் நடிகர் சோனு சூட்டுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மீது வழக்கு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
ethir neechal actress madhumitha car accident issue

தனியார் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக இருக்கும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 21ஆம் தேதி அவரது ஆண் நண்பரின் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். பின்பு திரும்பி வந்த போது காரை மதுமிதா ஓட்டி வந்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்துள்ளது.

அதனால் வாகனத்தை திருப்பி ஒன்வே ரூட்டில் ஓட்டி வந்துள்ளார். அதே சாலையில் காவலர் ரவிகுமார், இருசக்கர வாகனத்தில் காருக்கு எதிர்ப்புறமாக வந்துள்ளார். மதுமிதா ஓட்டி வந்த கார் ரவிகுமார் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரவிகுமாருக்கு வலது கால் தொடையிலும், இடது கை முட்டியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரவிகுமாரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

பின்பு பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், மதுமிதா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்துள்ளனர். பின்பு ஆர்டிஓ சோதனைக்குப் பின் காரை ஒப்படைத்துள்ளனர். அடுத்து சில மணி நேர விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்துள்ளனர்.