sj surya praised director arunkumar

இயக்குநராக அறிமுகமாகி நடிகராக மாறிய எஸ்.ஜே சூர்யா தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விக்ரமின் வீர தீர சூரன், விக்னேஷ் சிவனின் எல்.ஐ.கே, கார்த்தியின் சர்தார் 2, தெலுங்கில் நானியின் சூர்யாவின் சனிக்கிழமை என ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.

alt="aட்" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a8cde28d-842f-4b3c-b745-b429a6da7c81" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_29.jpg" />

இந்த நிலையில் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தைக் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “மதுரையில் இயக்குநர் அருண்குமார் சார் ஒரு அசாதாரண எபிசோடை (ப்ரீ கிளைமாக்ஸ்) படமாக்கினார். இதில் விக்ரம் சார், சிராஜ் சார், நானும் நடித்தோம். இயக்குநர் அருண் குமார், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், தனது உதவியாளர் மற்றும் படக்குழுவினருடன் இந்த எபிசோடை பத்து நாட்கள் தொடர்ந்து ஒத்திகை பார்த்திருக்கிறார்.பின்னர் எங்களை (நடிகர்களை) படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்று, எங்களுடன் 3 இரவுகள் ஒத்திகை பார்த்தார். பின்பு அதிகாலை 5.05 மணியளவில் வெற்றிகரமாக அந்த காட்சியை எடுத்து முடித்தார். நான் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன், இயக்குநர் அருண்குமார் சார் ‘கலைத்தாயின் இளைய மகன் ஐயா நீர்(நீங்கள்)” எனக் குறிப்பிட்டுப் படத்தின் தயாரிப்பாளரான ரியா ஷிபுவிற்கு வாழ்த்துக்கள் கூறினார்.

Advertisment

sj surya praised director arunkumar

கடந்த வருடம் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்திருந்தார் எஸ்.ஜே சூர்யா. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டிய ரஜினி, இந்நாளின் திரை உலக நடிகவேள் எனப் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து எஸ்.ஜே சூர்யா தற்போது அருண்குமாரைப் பாராட்டியுள்ளது வீர தீர சூரன் படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இப்படம் விக்ரமின் 62வது படமாக உருவாகிறது. துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.