Skip to main content

‘குக்கு வித் கோமாளி’ சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட்!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

sivangi

 

அனுபவ் சின்ஹா தயாரித்து இயக்கிய 'ஆர்டிகிள் 15' திரைப்படம், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. நேரடி இந்தி படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து, 'ஆர்டிகிள் 15' திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

 

தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'ஆர்டிகிள் 15' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ‘குக்கு வித் கோமாளி’ சிவாங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தில் நடிக்க சிவாங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது அவரது இரண்டாவது படமாகும். இவை தவிர்த்து, பிற படங்களிலும் சிவாங்கியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்