Skip to main content

"உங்கள் ஆட்சியில்தான் பொற்காலம் என்று சொல்ல வையுங்கள்" - சிவகுமார் வேண்டுகோள்!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

vghsrg

 

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகுமார் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்...


"வணக்கம்! 

 

திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 1996இல் திமுக 172 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கலைஞர் இறந்த பிறகு, 125 இடங்களில் தனிப் பெரும் கட்சியாக தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது ஸ்டாலினின் அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று, தாத்தாவிற்கேற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார். முதலமைச்சர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கரோனா காலத்திலிருந்து நம் மக்களைக் காப்பாற்றுங்கள். மருத்துவமனைகளிலும் மருந்து கடைகளிலும் காலையிலிருந்து மாலைவரை மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனதுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கை இல்லை. அப்படியே படுக்கைகள் இருந்தாலும் ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தால் வெண்டிலேட்டர் இல்லை. இந்தக் காலத்திலிருந்து மக்களைக் காப்பாத்துங்க. 

 

ஆந்திரா, கர்நாடகம், கேரளாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தந்த தாய் மொழிகளைப் படித்தே ஆக வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் குழந்தைகள் தமிழ் கற்காமலே பட்டப்படிப்பு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லும் அவலம் இங்கே மட்டுமே இருக்கிறது. செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞரோட வாரிசு நீங்கள். இங்கு தமிழ் மொழியில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும். ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில்தான் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்'' என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சால்வையைத் தூக்கியெறிந்த விவகாரம் - விளக்கமளித்த சிவகுமார்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
sivkumar about shawl throw iss

நடிகர் சிவகுமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் செய்யும் செயல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்த வகையில் காரைக்குடியில் சில தினங்களுக்கு முன்பு பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழாவில் சிவக்குமார் கலந்துகொண்டபோது, வயதான ஒருவர் அவருக்கு பொன்னாடை அணிய காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த சிவகுமார், அவர் கையில் வைத்திருந்த பொன்னாடையை பிடுங்கி தூக்கி எறிந்தார். இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வந்தது.   

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிவகுமார் மற்றும் அந்த பெரியவர் இருவரும் ஒன்றாக வீடியோ வாயிலாகப் பேசியுள்ளனர். சிவகுமார் பேசியதாவது, “அந்த பெரியவர் யாரோ எவரோ இல்லை. என் தம்பி. 50 ஆண்டுகால நண்பர். அவர் கல்யாணத்தையே நான்தான் பண்ணி வச்சேன். அது மட்டுமல்ல, மகள் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பேரன் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பொதுவா ஒரு நிகழ்ச்சிகளில் எனக்கு யாராவது சால்வை அணிய வந்தார்கள் என்றால், அதை திருப்பி அவங்களுக்கே போத்திருவேன். சால்வை அணியும் பழக்கம் எனக்கு கிடையாது. 

அன்னைக்கு 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சு 10 மணி ஆகும்போதுதான் நான் பேசுனேன். அப்போவே செம்ம டயர்ட் ஆகிருச்சு. கீழ கரீம் நின்னுக்கிட்டு இருந்தார். எனக்கு சால்வை போடுறது பிடிக்காது என்பதை தெரிஞ்சு அந்த மனுசன் கையில் சால்வையோடு நின்னுக்கிட்டு இருந்தார். பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழ போட்டது தப்புதான். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருத்தமும் படுகிறேன்” என்றார். சிவகுமார் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நடுவே அந்த பெரியவரும், சிவகுமாருக்கும் அவருக்கும் உண்டான நட்பை பற்றி பேசினார். மேலும் சிவகுமாருக்கு சால்வை போடுவது பிடிக்காது என்பது தெரிந்தும் சால்வை எடுத்து வந்தது தப்பு தான் எனக் கூறினார். 

Next Story

பொன்னாடையைப் பிடுங்கி வீசிய சிவக்குமார்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
sivakumar threw shawl in book release event

நடிகர் சிவகுமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் செய்யும் செயல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. 2018 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இளைஞர் ஒருவர் சிவகுமாரிடம் செல்ஃபி எடுக்க வந்த நிலையில், அந்த செல்ஃபோனை கோபமாகத் தட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பின்பு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட அவர், அந்த இளைஞருக்கு புது செல்ஃபோனும் வாங்கிக் கொடுத்தார். 

இதேபோல், 2019ல் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் செல்ஃபி எடுக்க வந்த ஒரு இளைஞனின் செல்ஃபோனை தூக்கி எறிந்தார். இதுவும் பரவலாகப் பேசப்பட சிவகுமாரின் செயல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் அரசியல்வாதியும் எழுத்தாளருமான பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். காரைக்குடியில் நடந்த இந்த விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த சிவகுமார், மக்களின் முக்கிய பிரச்சனையான தண்ணீருக்காகப் போராடி வழக்கை சந்தித்தவர் எனப் புகழாரம் சூட்டி, பழ. கருப்பையா காலில் விழுந்து வணங்கினார். 

இதனைத் தொடர்ந்து சிவகுமார் கீழே இறங்கி வந்து கொண்டிருக்கையில் வயதான ஒருவர் அவருக்கு பொன்னாடை அணிய காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த சிவகுமார், அவர் கையில் வைத்திருந்த பொன்னாடையை பிடுங்கி தூக்கி எறிந்துவிட்டார். இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.