/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/493_4.jpg)
சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில் 'ப்ரின்ஸ்' படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர். இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)