Skip to main content

நிறைவடைந்த படப்பிடிப்பு; குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

sivakarthikeyan starring don movie shooting wrap

 

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

ad

 

சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில்  டான் படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழு இதனிடையே டப்பிங் பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் டான் படத்தின் படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் நிறைவு செய்த படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இத்தகவலை படக்குழு உறுதி செய்துள்ளது. சமீபத்தில்  நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளதாக கூறிய நிலையில் தற்போது படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனால் விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்