Skip to main content

யார் ஹீரோ? சிக்கலில் சிவகார்த்திகேயன் படக்குழு...

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வேலைக்காரன் படத்திற்கு பிறகு ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் ஒன்றில் சிவா நடித்துள்ளார் என்று அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். சிவா, மிஸ்டர் லோக்கலுக்கு பின் வரிசையாக நான்கு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
 

sivakarthikeyan

 

 

அதில் ஒரு படம்தான் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ. இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியான சமயத்தில்தான் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஐந்து மொழிகளில் ஹீரோ என்றொரு படம் உருவாகுவதாகவும் அறிவிப்பு வெளியானது.
 

மேலும் விஜய்தேவரகொண்டாவை வைத்து ஹீரோவை எடுக்கும் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் டைட்டில் உரிமையை நாங்கள்தான் பதிவு செய்து வைத்திருக்கிறோம் என்று முன்னமே தெரிவித்திருந்தது. ஆனாலும், இதை கண்டுகொள்ளாமல் சிவா படத்தின் போஸ்டர் வரை ஹீரோ என்றே டைட்டில் வெளியாகியுள்ளது. 
 

100


இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை வைத்து ஹீரோ படத்தை தயாரிக்கும் ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் இதை சட்டப்படி அணுகுவதற்காக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் இரண்டு நிறுவனங்களும் இப்போது யார் படத்தின் டைட்டில் ஹீரோ என்ற பிரச்சனையில் இறங்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

காவல் நிலையத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay devarakonda family star trol complaint issue

கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படம் ஃபேமிலி ஸ்டார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்க திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

இப்படம் கடந்த 5ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான நிலையில் கலைவையான வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ட்ரோல்களுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா தரப்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் அனுராக் மற்றும் அவரது ரசிகர் மன்ற தலைவர் நிஷாந்த் குமார் அளித்த புகாரில், “விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனிநபராகவும் குழுக்களாகவும் இதை செய்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா தன் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.