Skip to main content

வசூலில் உச்சம் தொட்ட சிவகார்த்திகேயன்... தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

 sivakarthikeyan doctor movie which has collected 100 crore

 

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'டாக்டர்' படத்தில் நடித்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். வினய் ராய், யோகி பாபு, ரெடின் கிங்ஸிலி, அருண் அலெக்ஸாண்டர் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வழங்க எஸ்.கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. 

 

கரோனா பரவலால் நீண்ட நாட்களாக வெளியீட்டில் தள்ளிப்போன 'டாக்டர்' திரைப்படம் கடந்த மாதம் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'டாக்டர்' திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக கே.ஜே.ஆர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," இது வேற மாதிரி பிளாக்பஸ்டர். இப்படம்  வெளியாகி 25 நாட்கள் உங்களை சிரித்து கைத்தட்டி உற்சாகப்பட வைத்துள்ளது. டாக்டர் திரைப்படத்தின் மொத்த திரையரங்க வசூல் 100 கோடியை கடந்துள்ளது என நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். இந்த வெற்றி உங்களுக்கும் எங்களுக்குமானது " என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் 'டாக்டர்' திரைப்படம் முதல் 100 கோடி வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிலர் 2 வேண்டாம் என நெல்சன் சொன்னார். ஆனால்...” - வசந்த் ரவி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vasanth ravi about jailer 2

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நாளை(ஏப்ரல் 18) வசந்த் ரவி பிறந்தநாள் காண்கிறார். இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
  
அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்களா?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்றுதான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

‘ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் , ‘பார்ட் 2க்கான லீட் இருக்கு சார் என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.