sivakarthikeyan about thuppakki and amaran movie

சிவகார்த்தியேன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடாதப் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற தீபாவளியன்று அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி மற்றும் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தொகுப்பாளினி “இப்படம் மிலிட்டரி படம், துப்பாக்கியின் கனம் எப்படி இருக்கிறது” என சிவகார்த்திகேயன் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “துப்பாக்கி எப்பவுமே ரொம்ப கனமானது. அதை சரியாக கையாள வேண்டும். முடிந்தளவு சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறேன். மொத்த படக்குழுவும் அந்த சிரத்தை எடுத்துள்ளது. அதைத் தாண்டி எங்களுக்கு தைரியமாக கமல் சார் இருக்கிறார்.

இந்த கதையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. கதைதான் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. என்னை பொறுத்தவரை மேஜர் முகுந்த் வரதராஜன் சூப்பர் ஹீரோ. அவரது வாழ்க்கையை திரையில் சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எல்லா படத்தையும் நேர்மையாக பண்ணுவோம். ஆனால் இந்தப் படத்தில் நேர்மையைத் தாண்டி ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை சரியாக செய்திருக்கிறோம் என நினைக்கிறேன்” என்றார்.