/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/96_37.jpg)
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதைப் பார்க்கையில் பரோலில் வெளிவந்த ஒரு கைதியை பற்றி சொல்வது போல் அமைந்துள்ளது.
இந்த நிலையில் இப்படம் பற்றி இயக்குநர்ஆண்டனி பாக்கியராஜ் பேசுகையில், “இந்த படத்தில் அரசியல் இருக்காது. எல்லா விஷயங்களிலும் அரசியல் இருப்பது போல இந்த கதையிலும் அரசியல் இருக்கும். மற்றபடி நேரடியாக அரசியல் பேசியிருக்க மாட்டோம். ஹீரோவை ரவுடியாக காட்டவில்லை. படத்தில் சோசியல் மெசெஜ் மாதிரி ரெண்டு மூணு விஷயங்கள் பேசியிருக்கோம். அது திணித்தது போல் இருக்காது. டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)