sunitha

நடிகர் விஜய்யின் ‘பத்ரி’ படத்தில் ‘காதல் சொல்வது...’ என்னும் பாடலைப் பாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகி சுனிதா. இவர் தெலுங்கு திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

Advertisment

பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கும் சுனிதாவுக்கு 19 வயதிலேயே திருமணம் நடைபெற்றுவிட்டது. பின்னர் சுனிதாவுக்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரபனேனி என்பவரை சுனிதா 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத் அருகே உள்ள அம்மாபள்ளி ஶ்ரீ சீதாராம கோவிலில் நடந்தது. ஏராளமான திரைப்பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ராம் வீரபனேனியும் சில வருடங்களுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.