Skip to main content

நிகழ்ச்சியில் விபத்து; பாடகர் பென்னி தயாளுக்கு பலத்த காயம்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Singer Benny Dayal accident in live concert

 

தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் பாடல்களைப் பாடியவர் பென்னி தயாள். மேலும் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ட்ரோன் கேமரா பென்னி தயாள் தலையில் இடித்துள்ளது. இதில் தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு விரல்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 

 

அவர் பேசியதாவது, "காயங்கள் இப்போது பரவாயில்லை. இதிலிருந்து மிக வேகமாக மீண்டு வருவேன் என்று நினைக்கிறேன். நான் மூன்று விஷயங்களை உங்களிடம் கூற விரும்புகிறேன். முதலில் அனைத்து பாடகர்களும் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது ட்ரோன் கேமரா அருகில் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் அசைவிற்கும் ட்ரோன் கேமரா இயக்கும் நபருக்கும் ஒரு புரிதல் இருக்காது. ட்ரோன்  ஆப்பரேட் செய்யும் ஒருவரை கூடவே வைத்துக் கொள்ளுங்கள்.

 

தயவு செய்து அனைத்து கல்லூரிகள், நிறுவனங்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் ஆபரேட்டரை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால் இது மிகவும் ஆபத்தானது. நாங்கள் வெறும் பாடகர்கள். நாங்கள் மேடையில் பாடுகிறோம் அவ்வளவு தான். நாங்கள் ஸ்டண்ட் செய்ய விஜய், அஜித், சல்மான் கான் அல்லது பிரபாஸ் போன்ற ஆக்‌ஷன் ஹீரோக்கள் அல்ல. அதனால் நேரலை நிகழ்ச்சியின் போது ட்ரோன்கள் பாடகருக்கு மிக அருகில் வரக்கூடாது" எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.