sinam

‘தடம்’ படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டானார் அருண் விஜய். அதில் ஒரு படம்தான் ‘சினம்’. தேசிய விருதுபெற்ற இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

Advertisment

இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்கலாம் என்றிருந்தபோது, கரோனா அச்சுறுத்தலால் சினிமா துறை முடங்கியது. இதன்பின் கரோனா லாக்டவுன் சமயத்தில் சில நிபந்தனைகளுடன் இறுதிக்கட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ‘சினம்’ படக்குழு டப்பிங் பணிகளைத் தொடங்கியது.

Advertisment

அருண் விஜய் டப்பிங் பேச வந்தபோது புகைப்படங்கள் வெளியாகின. அப்போது அவருடைய லுக் பெரிதும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதுவரை இந்த படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று (11/01/2021) டீஸர் வெளியாகியுள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/FgvkU-RjtEQ.jpg?itok=ny0sU3Jo","video_url":" Video (Responsive, autoplaying)."]}