Skip to main content

'வாரிசு' படத்தில் சிம்பு? - ஷாக்கான ரசிகர்கள்

 

simbu in vijay varisu movie

 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் 'வாரிசு' படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ஒரு துள்ளலான பாடலாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பாடலை அடுத்த மாதம் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் 'ரஞ்சிதமே' வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்பாடலும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக விஜய் படத்தில் சிம்பு பாடியுள்ளார் என வைத்துக் கொள்ளலாம். மேலும் இதனால் ரசிகர்கள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் திளைப்பார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்