Skip to main content

'சிம்பு ஒரு சுயம்பு!' பாராட்டிய பார்த்திபன்... கிப்ட் அனுப்பிய சிம்பு!

HDH

 

 

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா அச்சுறுத்தல் முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நடிகர் பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் 'சிம்பு ஒரு சுயம்பு' என்று பாராட்டிப் பேசியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிம்பு நடிகர் பார்த்திபனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு பூங்கொத்து, சாக்லெட்கள் அனுப்பி வைத்துள்ளார். இதை புகைப்படம் எடுத்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"சுயம்பு 'சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட, உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார். "Mr.Simbu நன்றியதில் Mr.பண்பு ஆனார் எண்ணப்புத்தகத்தில்! எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் work பண்ணலேன்னு” அதாகப்பட்டது... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!'' என பதிவிட்டுள்ளார்.