simbu

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ள ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார்.இவ்விரு படங்களையும் தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை இயக்குநர் கௌதம் மேனன் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கவிஞர் தாமரை பாடல் எழுதுகிறார்.

இது, சிம்பு - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். இக்கூட்டணியில் ஏற்கனவே உருவான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.