myskin

Advertisment

சைக்கோ படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் படம் பிசாசு 2. சைக்கோ படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய இரண்டு பாடல்களும் ஹிட் அடித்தது. அதைபோன்றே பிசாசு 2 படத்திலும் ஒரு மெல்லிசை பாடலை பாடியுள்ளார்.

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை கார்த்திக் ராஜா. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது.

Advertisment

பிசாசு 2 படத்தில் பாடல் ஒன்றை பாடுவதற்காக அமெரிக்காவில் இருந்த அவர், பாடலின் வரிகளும், மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே அங்கிருந்து சென்னை வந்து இந்தப் பாடலை பாடி கொடுத்துள்ளார்.