Skip to main content

மாயோனில் நடித்தபடியே ரங்காவிற்கு டப்பிங் பேசி முடித்த சிபிராஜ் 

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
sibi

 

நடிகர் சிபிராஜ் தற்போது தனது கேரியரின் பெருமைக்குரிய படமான 'மாயோன்' படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள 'ரங்கா' படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார். இந்நிலையில் இப்பட தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா ரங்கா படத்தை பற்றி கூறும்போது.... "இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குனர் கிடைப்பது வரம். படத்தின் இறுதி வடிவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, அதை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை பார்க்கும்போது ஒரு பார்வையாளராக எனக்கும் ஆர்வம் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் படத்தின் முன்னேற்றத்திற்கு மிகுந்த கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்த இயக்குனர் வினோத்துக்கு தான் எல்லா பாராட்டுக்களும் சாரும்.

 

 

திறமையான நடிகர்கள் என்பதை தாண்டி, தயாரிப்பாளர்களின் முதலீடுகளை மனதில் வைத்து நடிக்கும் நடிகர்களுடன் பணியாற்றுவது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. இந்த முறையில், 'ரங்கா' படக்குழு என் நலனையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் காஷ்மீரின் கடுமையான பனிப்பொழிவு சூழலிலும், படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிவடைய தங்களால் முடிந்ததை செய்தனர்" என்றார். சிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர். ஜனவரி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இசையை வெளியிடவும், பிப்ரவரியில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என்ன ஊரு இது மனுஷ உயிருக்கு மதிப்பே இல்ல"- கவனம் ஈர்க்கும் சிபிராஜ் பட ட்ரைலர்  

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Sibi Sathyaraj ranga movie trailer out now

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் சிபிராஜ். கிஷோர் இயக்கத்தில் 'மாயோன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்திய அளவில் முதல் முறையாகப் பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் படத்தை உணரும் வகையில் ஆடியோ விளக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதனிடையே வினோத்.டிஎல். இயக்கத்தில் நடித்திருக்கும் படம் 'ரங்கா'. 'பாஸ் மூவிஸ்' தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நிக்கிலா விமல் நடிக்க ராம்ஜீவன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியிட்டு தயாராகவுள்ளது. 

 

ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. இப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

நீண்ட நாள் வெளியாகாமல் இருந்த சிபிராஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

Announcement of the release date of the long overdue Sibiraj film

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் சிபிராஜ். கிஷோர் இயக்கத்தில் 'மாயோன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்திய அளவில் முதல் முறையாகப் பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் படத்தை உணரும் வகையில் ஆடியோ விளக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதனிடையே வினோத்.டிஎல். இயக்கத்தில் நடித்திருக்கும் படம் 'ரங்கா'. 'பாஸ் மூவிஸ்' தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நிக்கிலா விமல் நடிக்க ராம்ஜீவன் இசையமைத்துள்ளார். 

 

இந்நிலையில் 'ரங்கா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி மே மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதனை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டே இப்படம் திரையரங்கில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இரண்டு வருடத்திற்கு முன்பே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.