Skip to main content

சமூக பிரச்சனைகளை விவாதிக்கத் தயாராகும் ஸ்ருதிஹாசன்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

Shrutihaasan met her fans social media live

 

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28ஆம் தேதி கொண்டாடவுள்ளார், இதனையொட்டி நடிகை ஸ்ருதிஹாசன், சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரசிகர்களோடு உரையாட முடிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து மனநலம், திரைப்படம்  மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில் சமூக வலைதளப்பக்கத்தில் ஜனவரி 27 முதல் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை அவர் நடத்தவுள்ளார். மேலும் இந்த நேரலையில்  நடிகை ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து பொதுவாக சமூகத்தில் விவாதிக்க மறுக்கப்படும் பல தலைப்புகளில் விவாதிக்க உள்ளார்.

 

இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறுகையில்," இந்த நேரலை நடத்துவதன் முக்கிய நோக்கமே இந்த தலைப்புகளைப் பற்றி சமூகத்தில் ஒரு விவாதத்தை, உரையாடலை துவக்கவேண்டும் என்பதே ஆகும். ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடப் பல வழிகள் உள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம் என்பது, நான் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி நேர்மையான விவாதங்களைத் சமூகத்தில் ஏற்படுத்துவதே ஆகும். இதுகுறித்து இன்னும் சமூகத்தில் அதிகம் பேசப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தத் தலைப்புகளில் நிகழும் உரையாடல்களில் நிறைய நபர்களை இணைத்து, நேரலையின் போது பலரிடமிருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பெறுவதும், இந்தச் சிக்கல்கள் குறித்து அவர்களைச்  சிந்திக்கவும், பகிரவும், விவாதிக்கவும் வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ டீசர் அப்டேட்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Lokesh Kanagaraj - Shruti Haasan's 'Inimel' Teaser Update

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிராபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து, 'தி ஐ' (The Eye) மற்றும் ‘சென்னை ஸ்டோரி’ எனும் இரண்டு ஹாலிவுட் படங்களிலும், டகோயிட் (Dacoit) எனும் தெலுங்கு படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

இதனிடையே கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றவுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது. அதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த மாதம் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த ஆல்பத்திற்கு ‘இனிமேல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 14 ஆம் தேதி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்தது. 

மேலும், இந்த ஆல்பத்திற்கு ஸ்ருதிஹாசன் இசையமைக்க, கமல்ஹாசன் வரிகள் எழுதியுள்ளதாகக் கூறப்பட்டது. துவர்கேஷ் பிரபாகர் இயக்கியுள்ள இந்த ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் புதிய அப்டேட்டை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. அதில், இந்த ஆல்பம் பாடலின் டீசர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. மணமக்கள் கோலத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் போஸ்டரை வெளியிட்டு, ‘வெற்றியாளர்கள் இல்லை; தோற்றவர்கள் இல்லை; இனிமேல் வீரர்கள் மட்டுமே’ எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

லியோ படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும், ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“30 வருசமாச்சு, இன்னும் குறைந்த பாடில்லை” - நக்கீரன் ஆசிரியர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
nakkheeran editor speech in karpu bhoomi audio launch

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளை தான் வெளியிட கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர் கலந்து கொண்டு பேசுகையில், “இயக்குநர் நேசமுரளி பேசியதைப் பார்த்தால் இனி படம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறேன். போகிற போக்கில் ராமாயணம் கட்டுக்கதை என சொல்லிவிட்டார். இதையே இனி விடமாட்டார்கள். சீதை என சிங்கத்துக்கு பெயர் வைத்தாலே இப்போது அடிக்கிறார்கள். இந்த சூழலில் நடிகை கவுதமியை பற்றி பேசுகிறார். பாரத தேசமா பாலியல் தேசமா என்கிறார். இதையெல்லாம் கவனித்து கொண்டிருப்பார்கள். ஆனால் இது தான் எதார்த்தம். இதற்குள் தான் வாழ்கிறோம். அதில் ஜெயிக்கிறோம். அவர் பேசின மணல்மேடு, பொள்ளாச்சி நாங்கள் கொண்டு வந்தது தான். மணிப்பூர் சம்பவத்தை நாங்களும் பேசி இருக்கிறோம். இங்கு சென்சாரை நம்பித்தான் படமே எடுக்க வேண்டியிருக்கிறது. நாங்களும் கூச முனுசாமி வீரப்பன்னு ஒரு டாக்குமெண்டரி சீரிஸ் பண்ணோம். அதைப் பார்த்துவிட்டு சிலர் கேட்டார்கள்… ஏன் இதை படமாகச் செய்யவில்லை என்று. வேறு வினையே வேண்டாம். சென்சாரிடம் இருந்து ஒரு ரீலும் தப்பாது. ஏன் தேவையின்றி அவர்களிடம் போய் கெஞ்ச வேண்டும் என்று கூறினேன். 

இந்த பொள்ளாச்சி விஷயத்தில் மொத்தம் 1100 வீடியோக்கள், எங்களிடமிருந்தது வெறும் 3 மட்டும் தான். மற்ற வீடியோக்களை வெளியிடக் கூடாது என்று அதிகாரிகளும் ஒரு அரசியல் பிரமுகரும் மிரட்டினார்கள். சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து சாட்சி விசாரணை செய்ய வேண்டும் என்று அழைப்பு வருகிறது. அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி யாரைக் கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள். யாரைக் கேட்டு வெளியிட வேண்டும் என்று கேட்டேன். வெளியிட்டிருக்கவே கூடாது என்றார்கள். நான் அப்படி சட்டம் எதுவும் இருக்கிறதா என்றேன். சட்டம் இல்லை ஆனால் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். குற்றவாளி தப்பாமல் இருக்கவும், இது போன்று இனி நடக்காமல் இருக்கவும் தான் நாங்கள் செயலாற்றி இதை செய்தி ஆக்குகிறோம் என்று கூறினேன். பத்திரிக்கையில் போட்டதற்கே இந்த விசாரணை. ஆனால் நேச முரளி சினிமா எடுத்திருக்கிறார். சும்மா விடுவாங்களா.  

இயக்குநர் நேசமுரளியின் கோபமும் வேகமும் புரிகிறது. எங்களுக்கும் அந்த கோபம் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் வேறுமாதிரி இருக்கிறது. உங்களை நம்பி தொழில்நுட்ப கலைஞர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இது போன்று படமெடுத்தால் 109 கட் பண்ணுவோம் என்பதற்கு நேசமுரளி உதாரணமாகிவிட்டார். சென்சார் போர்டை ஆட்கொண்டுவிட்டனர். அதை மீறித் தான் அவர் ஜெயித்தாக வேண்டும். அடுத்ததாக மணிப்பூர் விவகாரத்தை படமெடுக்க வேண்டும் என சொன்னார். மணிப்பூர் என்ற தலைப்பை எப்படி விடுவார்கள். இந்தியாவே பார்த்து கொண்டிருக்கிற பாலியல் பிரச்சனை. ஆனால் எதுவுமே பண்ணவில்லை, என சொல்லி மறுபடியும் அந்த பூமியில் அது போன்ற சம்பவங்கள் நடக்கிறதாக சொல்கிறார்கள். இதை எப்படி சென்சார் அனுமதிக்கும் என நம்புகிறீர்கள். 

மணல்மேடு விஷயத்தை 1994லயே நான் அட்டைப்படமா எடுத்தேன். ஒரு பிள்ளைய வீடு தேடி வந்து சிதைச்சிட்டாங்க. பால்டாயில் குடிச்சி குடும்பமே இறந்துட்டாங்க. 30 வருசமாச்சு. இன்னும் இதுமாதிரி சம்பவம் குறைந்த பாடில்லை, கூடத் தான் செய்கிறது. இப்படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அதற்கான வழியை தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு நக்கீரனும் துணை நிற்கும்” என்றார்.