Skip to main content

விபத்து குறித்து விளக்கமளித்த சர்வானந்த்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Sharwanand explained about his car accident

 

தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தவர் சர்வானந்த். தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'கணம்' படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருக்கு கடந்த மே மாதம் அவரது காதலி ரக்‌ஷிதா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்க திட்டமிட்டிருந்தது. 

 

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகரில் அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. காரை சர்வானந்த் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்கு சொற்ப நாட்களே இருந்த நிலையில் இந்த செய்தி சர்வானந்த் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் கார் விபத்து குறித்து விளக்கமளித்துள்ளார் சர்வானந்த். அவர் கூறுகையில், "எனது கார் விபத்து மிகவும் சிறிய சம்பவம். உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் நான் வீட்டில் முற்றிலும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் அக்கறைக்கு அனைவருக்கும் நன்றி" என்றுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிச் சுவர் இடிந்து விபத்து; அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
School wall collapse accident in gujarat

குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நேற்று வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வகுப்பறையின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. 

இதில் சுவர் ஓரத்தில் அமர்ந்திருந்த சில மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் பதற்றமடைந்து, வகுப்பறையில் இருந்து வெளியேறினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஆசிரியர்கள், மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வதோதரா தீயணைப்பு துறையினர், சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்த மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதன் பிறகு மாணவர்கள் அனைவரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதில் படுகாயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

ரயில் தடம் புரண்டு விபத்து; மீண்டும் பரபரப்பு

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Train derailment accident; The excitement again

உத்தரபிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சண்டிகர் - திப்ரூகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் நான்கு ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகாத நிலையில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அண்மையில் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  மீண்டும் ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.