பிரபல இந்தி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் படம் 'டங்கி'. இதில் டாப்ஸி, போமன் இரானி மற்றும் விக்கி கௌஷல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரிக்கும் இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த நிலையில் ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் ட்ரைலர் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. 41 மில்லியன் பார்வையாளர்களை தற்போது வரை கடந்துள்ளது. இப்படம்நிஜ வாழ்க்கையில்நான்கு நண்பர்களின் அனுபவங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. அந்த நபர்களின் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, காதல், அன்பு, நட்பு என அனைத்தும் கலந்து சொல்லும் திரைப்படமாகஉருவாகியுள்ளது.