Skip to main content

ஷாரூக்கானின் நான்கு மாடி அலுவலகம் எப்படி மாற்றப்பட்டது?

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.
 

sharuk khan

 

 

 


தற்போது இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகர் ஷாரூக் கான், அவருக்குச் சொந்தமான நான்கு மாடி அலுவலகத்தை கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்குப் பயன்படும் வகையில் தற்காலிகமாக மும்பை அரசுக்குத் தந்திருக்கிறார். 
 

 


இந்த நான்கு மாடி அலுவலகம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எப்படி மாற்றப்பட்டுள்ளது என்ற வீடியோவை ஷாரூக்கானின் மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், மும்பை மாநகராட்சியின் அறிவுரை மற்றும் மீரா அறக்கட்டளையின் அறிவுரையையும் அனுகியபின், ஷாரூக்கான் மனைவிக்குச் சொந்தமான கௌரி டிசைன்ஸ் நிறுவனம் இந்த அலுவலகத்தை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை குவாரண்டைன் செய்துகொள்ள மாற்றப்பட்டிருப்பதாக கௌரி தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்கள் தான் ஒரிஜினல்” - வைரல் வீடியோ குறித்து ஷாருக்கான் - மோகன்லால்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sharukhan mohan lal conversation about mohan lal viral dance video

கேரளா கொச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொண்டார். அதில் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து ‘ஹுக்கும்...’ பாடலுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்திலிருந்து ‘ஜிந்தா பந்தா...’ பாடலுக்கும் மேடையில் நடனமாடினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மோகன்லால் ரசிகர்களோடு இணைந்து ரஜினி ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். 

இந்த நிலையில் ஷாருக்கான் மோகன்லால் நடன வீடியோ குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், “இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் சரிபாதி அளவு நன்றாக நடனமாடியிருப்பேன் என விரும்புகிறேன். லவ் யூ சார். உங்கள் வீட்டு டின்னருக்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா” எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஷாருக்கான் பதிவிற்கு தற்போது மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “டியர் ஷாருக்கான். உங்களைப் போல் யாராலும் நடனமாட முடியாது.  உங்களது ஒப்பற்ற  உன்னதமான ஸ்டைலில் நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வெறும் டின்னர் மட்டும் தானா? பிரேக் ஃபாஸ்ட் கூடாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்திருந்தார். அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மோகன்லால், பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கத்தில் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார்.   

Next Story

ரிஹானா கலை நிகழ்ச்சியும் ஷாருக்கானின் டான்ஸும் - வைரலாகும் வீடியோ

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
rihanna sharukhan anandh ambani wedding dance video

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடக்கிறது. குஜராத் ஜாம் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளார். 

இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும் இரவு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்களோடு நடனமாடினார். ஜான்வி கபூருடன் அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நிகழ்ச்சியில் ஷாருக்கான் ஆடிய வீடியோவும் வைராகி வருகிறது.  

பாப் பாடகி ரிஹானா கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.