/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_105.jpg)
ஷாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மாதம் துபாயில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினருடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், "பொன்னியின் செல்வன் படத்தை என் பேச்சை கேட்காமல் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் எடுத்தார். படம் மகத்தான வெற்றி பெற்றது. அதே போல் தயாரிப்பாளர் கண்ணன் ரவி இராவண கோட்டம் படத்தை எடுத்துள்ளார். இப்படமும் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறேன்" என்றார். இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 12ஆம் தேதி (12.05.2023) உலகெங்கிலும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு ஒரு போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது. இப்போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)