Skip to main content

“வாய்ப்புக்கு காத்திருக்கணும்; கிடைக்கும்போது பயன்படுத்தணும்” - தத்துவம் உதிர்க்கும் சாந்தனு 

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

 Shanthanu interview

 

இராவண கோட்டம் திரைப்படத்தின் நடிகர் சாந்தனு உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

 

ஒரு கட்டத்தில் கதைத் தேர்வு குறித்த மெச்சூரிட்டி அனைவருக்கும் வரும். அப்படி ஒரு நிலையில் என்னைத் தேடி வந்த கதை இது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். விக்ரம் சுகுமாரன் இயக்கிய 'மதயானைக் கூட்டம்'  படம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை மக்களிடம் வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்பதற்கான முயற்சி இது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கருவேல மரம் குறித்து நானும் நிறைய கற்றுக்கொண்டேன். கருவேல மரம் குறித்த விழிப்புணர்வு எங்கள் மூலம் மக்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி தான். எதிர்பார்ப்போடு சேர்த்து பயமும் வந்திருக்கிறது. 

 

நான் பாக்யராஜின் மகன் என்பது எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு போலத்தான். என் குடும்பத்தினர் எப்போதும் எனக்கு நல்ல சப்போர்ட்டாக இருந்து வந்துள்ளனர். மக்கள் எப்போதுமே நல்ல படத்தை ஆதரிக்கின்றனர். சினிமா பின்னணி இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்று பலரும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை உதாரணமாக வைத்துத் தான் என்னுடைய பயணம் தொடர்ந்து வருகிறது. வெற்றி தோல்வி குறித்து அப்பா எனக்கு நிறைய அட்வைஸ் செய்வார். வாய்ப்புகளுக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும். கிடைக்கும்போது சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்.

 

அதனால்தான் தோல்விகளைக் கடந்தும் என்னால் நம்பிக்கையோடு பயணிக்க முடிகிறது. விஜய் அண்ணா இருக்கும் உயரம் என்பது கத்தி மீது நடப்பது போன்றது தான். அனைத்தையும் நிதானமாக யோசித்து தான் செய்வார். யாரையும் புண்படுத்தமாட்டார். நிறைய போராடித்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளார். நிதானத்தையும், பொறுமையையும், நம்பிக்கையையும் அவரிடம் நான் கற்றுக்கொண்டேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெரிய இயக்குநர்கள் நேரடியாக அணுகுவார்கள்” - சரண்யா ரவிச்சந்திரன் பேட்டி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Saranya Ravichandran | Indian2 | Kamal Haasan | Shankar |

தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரண்யா ரவிச்சந்திரன் அண்மையில் வெளியான  இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்நிலையில்  நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக அவரை சந்தித்தபோது, அவரின் சினிமா வாழ்க்கை பற்றிய சுவாரசியமான தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். 

தொடக்கத்தில் வந்த பட வாய்ப்புகள் அணுகுமுறைகள் பற்றியும், தற்போது  வரும் பட வாய்ப்புகளின் அணுகுமுறையிலும் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளது என்ற கேள்வி குறித்து அவர் பதிலளிக்கையில் "மரியாதையில்தான் எல்லாம் உள்ளது, அவர்கள் மதிக்கவில்லை என்பதால்தான் நமக்கு திரைத்துறையில் நல்ல இடத்திற்குப் போக வேண்டும் என்ற வெறி வரும். அப்படிதான் அவர்கள் நம்மை புஷ் பண்ணிக் கொண்டு செல்வார்கள். சில சமயங்களில் இயக்குநர் அவரே வந்து அணுகாமல், ஏன்  உதவியாளரை அனுப்புகிறார் என்று தோன்றும், இயக்குநருக்குப் பல வழிகளில் அழுத்தம் இருக்கும், அடுத்த காட்சி குறித்த சிந்திப்பார்கள், ஆனால் சில பெரிய இயக்குநர் அவர்களாகவே வந்து நம்மிடம் அணுகுவார்கள், அது சில இயக்குநர்களின் ஸ்டைலாக இருக்கும் 

நான் முதல் படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பில் என்னிடம் இயக்குநர் பேசவே இல்லை. நானே அவரை அழைத்து என்னுடைய சீன் எப்போது வரும், நான் இங்குதான் உட்கார்ந்திருப்பேன் என்னைத் தேடாதீர்கள் என்று சொல்லுவேன், ஆனால் நான் நடித்து முடித்தபோது  படப்பிடிப்பின் இடைவேளையில் அவரே என்னிடம் வந்து சாப்டிங்களா? என்றெல்லாம் பேசினார். நம்ம வேலையைச் சரியாக செய்யும்போது அவர்களே மரியாதை தருவார்கள்" என்று கூறினார்.

Next Story

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் மனநிலை எப்படி இருக்கும்?; பிரதமர் மோடி பகிர்ந்த ருசிகர தகவல்!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
information shared by Prime Minister Modi on What will the mood be like on the day of the election results

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி ஏபிபி என்ற தனியார் செய்து நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் அன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் நான் கூடுதல் கவனமாக இருப்பேன். தேர்தலில் கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை என்ற விவரத்தில் இருந்து நான் தள்ளியே இருப்பேன்.

வாக்குகள் எண்ணும் நாளில், நான் தியானம் செய்வதை அதிகரிப்பேன். பிற தினசரி வேலைகளின் நேரத்தை அதிகரிப்பேன். வாக்கு எண்ணும் நாளில், யாரும் என் அறைக்குள் அனுமதிக்கமாட்டேன். என்னைத் தொலைப்பேசியில் தொடர்புகொள்ள யாரையும் அனுமதிக்கமாட்டேன். முடிவு நாளில், வெற்றி உறுதியாகும் வரை நான் விலகியே இருப்பேன். 

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் போது, தேர்தல் ஆணையம் என்னை மிகவும் தொந்தரவு செய்து, எனக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தது. நான் வெற்றி பெறுவது கடினம் என்று மக்கள் என்னிடம் கூறினார்கள். கடந்த 2001 டிசம்பர் 15ஆம் தேதி அன்று குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. முதல்வர் இல்லத்தில் என் அறையில் அமர்ந்தேன். நான் எந்த அழைப்புகளையும் எடுக்கவில்லை. மதியம் 1.30 மணியளவில், வெளியே டிரம்ஸ் வாசிக்கும் சத்தம் கேட்டது. அதனால் என்ன விஷயம் என்று கேட்க ஒருவரை அழைத்தேன். கட்சித் தொண்டர்கள் என்னை வாழ்த்த விரும்புவதாகக் கடிதம் ஒன்றைக் கொண்டு வந்தார். முடிவுகளின் குறிப்பை நான் முதன்முறையாகப் பெற்றேன். நல்ல மாலையும், இனிப்புப் பெட்டியும் வாங்கி வரச் சொன்னேன். எங்கள் வெற்றியைக் கொண்டாடும் முன் கேசுபாய் படேலுக்கு முதலில் மாலை அணிவித்தேன்” என்று கூறினார்.